திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

காப்பது ஓர் வில்லும் அம்பும், கையது ஓர் இறைச்சிப்பாரம்,
தோல் பெருஞ் செருப்புத் தொட்டு, தூய வாய்க் கலசம் ஆட்டி,
தீப் பெருங் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுகத் தன் கண்
கோப்பதும், பற்றிக் கொண்டார்-குறுக்கை வீரட்டனாரே.

பொருள்

குரலிசை
காணொளி