பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மாற்றம் ஒன்று அருள கில்லீர்; மதி இலேன் விதி இலாமை சீற்றமும் தீர்த்தல் செய்யீர்; சிக்கனவு உடையர் ஆகிக் கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்ய, ஆற்றவும் கில்லேன், நாயேன் ஆரூர் மூலட்டனீரே!