பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
இலவின் நா மாதர் பாலே இசைந்து நான் இருந்து பின்னும் நிலவும் நாள் பல என்று எண்ணி, நீதனேன் ஆதி உன்னை உலவினால் உள்க மாட்டேன்; உன் அடி பரவும் ஞானம் செலவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!