பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
துஞ்சு இருள் காலை மாலை, தொடர்ச்சியை மறந்து இராதே அஞ்சு எழுத்து ஓதில், நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும்; வஞ்சனைப் பால்சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த நஞ்சு அமுது ஆக்குவித்தார், நனிபள்ளி அடிகளாரே.