பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை, உண்டு, அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும்; கண்டம் கறுத்த மிடறு உடையான்; கண்டியூர் இருந்த தொண்டர் பிரானை- கண்டீர்- அண்டவாணர் தொழுகின்றதே.