திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கேசி

கண் மேல் கண்ணும், சடைமேல் பிறையும், உடையார்; காலனைப்
புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓடப் பொன்றப் புறம்தாளால்
எண்ணாது உதைத்த எந்தை பெருமான்-இமவான் மகளோடும்,
பண் ஆர் களி வண்டு அறை பூஞ்சோலைப் பழன நகராரே

பொருள்

குரலிசை
காணொளி