பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கடி ஆர் கொன்றைச் சுரும்பின் மாலை கமழ் புன் சடையார்; விண் முடியாப் படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய நெடியான், நீள் தாமரைமேல் அயனும், நேடிக் காணாத படியார்; பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே.