பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
குழல் ஆர் சடையர்; கொக்கின் இறகர்; கோல நிற மத்தம் தழல் ஆர் மேனித் தவள நீற்றர்; சரி கோவணக்கீளர் எழில் ஆர் நாகம் புலியின் உடைமேல் இசைத்து, விடை ஏறி, கழல் ஆர் சிலம்பு புலம்ப, வருவார் சித்தீச்சரத்தாரே.