பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
செஞ் சுடரோன் முதல் ஆகிய தேவர்கள் மஞ்சு உடை மேரு வலம் வரு காரணம் எம் சுடர் ஈசன் இறைவன் இணை அடி அம் சுடர் ஆக வணங்கும் தவமே.
பகலவன் மாலவன் பல் உயிர்க்கு எல்லாம் புகலவன் ஆய் நின்ற புண்ணிய நாதன் இகல் அற ஏழ் உலகும் உற ஓங்கும் பகலவன் பல் உயிர்க்கு ஆதியும் ஆமே.
ஆதித்தன் அன்பினோடு ஆயிரம் நாமமும் சோதியின் உள்ளே சுடர் ஒளியாய் நிற்கும் வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும் ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.
தானே உலகுக்குத் தத்துவன் ஆய் நிற்கும் தானே உலகுக்குத் தையலும் ஆய் நிற்கும் தானே உலகுக்குச் சம்புவும் ஆய் நிற்கும் தானே உலகுக்குத் தண் சுடர் ஆகுமே.
வலைய முக் கோணம் வட்டம் அறு கோணம் துலை இரு வட்டம் துய்ய விதம் எட்டில் அலை உற்ற வட்டத்தில் ஈர் எட்டு இதழ் ஆம் மலைவு அற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே.
ஆதித்தன் உள்ளில் ஆன முக் கோணத்தில் சோதித்து இலங்கும் நல் சூரியன் நூல் ஆங்கு ஏதம் உறும் கேணி சூரியன் எட்டில் சோதி தன் ஈர் எட்டில் சோடசம் தானே.
ஆதித்தனோடே அவனி இருண்டது பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது சோதிக்குள் நின்று துடி இடை செய்கின்ற வேதப் பொருளை விளங்குகிலீரே.
பாருக்குக் கீழே பகலோன் வரும் வழி யாருக்கும் காண ஒண்ணாத அரும் பொருள் நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன் ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.
மண்ணை இடந்து அதின் கீழ் ஓடும் ஆதித்தன் விண்ணை இடந்து வெளி செய்து நின்றிடும் கண்ணை இடந்து களி தந்த ஆனந்தம் எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே.
பாரை இடந்து பகலோன் வரும் வழி யாரும் அறியார் அருங் கடை நூலவர் தீரன் இருந்த திரு மலை சூழ் என்பர் ஊரை உணர்ந்தார் உணர்ந்து இருந்தாரே.
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கன்று ஆய நந்திக் கருத்துள் இருந்தனன் கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.
ஆதித்தன் ஓடி அடங்கும் இடம் கண்டு சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர் பேதித்து உலகம் பிதற்றும் பிதற்று எல்லாம் ஆதித்தனோடே அடங்கு கின்றாரே.
உருவிப் புறப்பட்டு உலகை வலம் வந்து சொருகிக் கிடக்கும் துறை அறிவார் இல்லை சொருகிக் கிடக்கும் துறை அறிவாளர்க்கு உருகிக் கிடக்கும் என் உள் அன்பு தானே.
எறிகதிர் ஞாயிறு மின் பனி சோரும் எறிகதிர் சோமன் எதிர் நின்று எறிப்ப விரிகதிர் உள்ளே வியங்கும் என் ஆவி ஒரு கதிர் ஆகில் உவா அது ஆமே.
சந்திரன் சூரியன் தான் வரில் பூசனை முந்திய பானுவில் இந்து வந்தேய் முறை அந்த இரண்டும் உபய நிலத்தில் சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே.
ஆகும் கலையோடு அருக்கன் அனல் மதி ஆகும் கலை இடை நான்கு எனல் ஆம் என்பார் ஆகும் அருக்கன் அனல் மதியோடு ஒன்ற ஆகும் அப் பூரனை ஆம் என்று அறியுமே.
ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி ஓர் அண்டத்தார்க்கும் உணரா உணர்வது பேர் அண்டத்து ஊடே பிறங்கு ஒளியாய் நின்ற தார் அண்டத் தக்கார் அரியத்தக்காரே.
ஒன்பதின் மேவி உலகம் வலம் வரும் ஒன்பதும் ஈசன் இயல் அறிவார் இல்லை முன்பதின் மேவி முதல்வன் அருள் இலார் இன்பம் இலார் இருள் சூழ நின்றாரே.
விந்து அபரம் பரம் இரண்டாய் விரிந்து அந்த அபரம் பரம் நாதம் ஆகியே வந்தன தம்மில் பரம் கலை ஆதி வைத்து உந்தும் அருணோ தயம் என்ன உள்ளத்தே.
உள்ள அருணோதயத்து எழும் ஓசை தான் தெள்ளும் பர நாதத்தின் செயல் என்பதால் வள்ளல் பரவிந்து வைகரி ஆதி வாக்கு உள்ளன ஐம் கலைக்கு ஒன்றாம் உதயமே.
தேவர் பிரான் திசை பத்தும் உதயம் செய்யும் மூவர் பிரான் என முன் ஒரு காலத்து நால்வர் பிரான் நடுவாய் உரையாய் நிற்கும் மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே.
பொய் இலன் மெய்யன் புவனா பதி எந்தை மை இருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு செய் இருள் நீக்கும் திரு உடை நந்தி என்று கை இருள் நீங்கக் கலந்து எழுந்தானே.
தனிச்சுடர் எற்றித் தயங்கு இருள் நீங்க அனித்திடு மேலை அரும் கனி ஊறல் கனிச் சுடராய் நின்ற கயிலையில் ஈசன் நனிச் சுடர் மேல் கொண்ட வண்ணமும் ஆமே.
நேர் அறிவாக நிரம்பிய பேர் ஒளி போர் அறியாது புவனங்கள் போய் வரும் தேர் அறியாத திசை ஒளி ஆய் இடும் ஆர் அறிவார் இது நாயகம் ஆமே.
மண்டலத்து உள்ளே மலர்ந்து எழும் ஆதித்தன் கண்டிடத்து உள்ளே கதிர் ஒளியாய் இடும் சென்றிடத்து எட்டுத் திசை எங்கும் போய்வரும் நின்று இடத்தே நிலை நேர் அறிவார்க்கே.
நாபிக் கண் நாசி நயன நடுவினும் தூபியோடு ஐந்தும் சுடர் விடும் சோதியை தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும் மூவரும் ஆக உணர்ந்து இருந்தாரே.
அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும் சென்றிடு ஞானச் சிவப் பிரகாசத்தால் ஒன்றும் இரு சுடர் ஆம் அருண உதயம் துன்று இருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.
கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் விடம் கொண்ட கண்டனும் மேவிய காயத்து அடங்கிட நின்றதும் அப் பரிசு ஆமே.
தானே விரிசுடர் மூன்றும் ஒன்றாய் நிற்கும் தானே அயன் மால் என நின்று தாபிக்கும் தானே உடல் உயிர் வேறு அன்றி நின்று உளன் தானே வெளி ஒளி தான் இருட்டு ஆமே.
தெய்வச் சுடர் அங்கி ஞாயிறும் திங்களும் வையம் புனல் அனல் மாருதம் வானகம் சைவப் பெரும்பதி தாங்கிய பல் உயிர் ஐவர்க்கு இடம் இடை ஆறு அங்கம் ஆமே.