திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வித்தினில் அன்றி முளை இல்லை அம் முளை
வித்தினில் அன்றி வெளிப்படும் ஆறில்லை
வித்தும் முளையும் உடன் அன்றி வேறு அல்ல
அத்தன்மை ஆகும் அரன் நெறி காணுமே.

பொருள்

குரலிசை
காணொளி