திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காயக் குழப்பனைக் காய நல் நாடனைக்
காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து உளே எங்கும் தேடித் திரிவர்கள்
காயத்து உள் நின்ற கருத்து அறியாரே.

பொருள்

குரலிசை
காணொளி