திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

துரியம் கடந்து துரியா தீதத்தே
அரிய வியோகம் கொண்டு அம்பலத்து ஆடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே
துரிய வல்லார்க்குத் துரிசில்லை தானே.

பொருள்

குரலிசை
காணொளி