திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: மேகராகக்குறிஞ்சி

ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு ஈர்-இருவர்க்கு
இரங்கி நின்று,
நேரிய நால்மறைப்பொருளை உரைத்து, ஒளி சேர் நெறி
அளித்தோன் நின்றகோயில்
பார் இசையும் பண்டிதர்கள் பல்-நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு,
வேரி மலி பொழில், கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும்
மிழலை ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி