திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: மேகராகக்குறிஞ்சி

காணும் ஆறு அரிய பெருமான் ஆகி, காலம் ஆய், குணங்கள் மூன்று
ஆய்,
பேணு மூன்று உருஆகி, பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான்
கோயில்
"தாணு ஆய் நின்ற பரதத்துவனை, உத்தமனை, இறைஞ்சீர்!" என்று
வேணு வார்கொடி விண்ணோர்தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை
ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி