உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம்
நிரை சேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிர் ஆய், அங்கு
அங்கே நின்றான்கோயில்
வரை சேரும் முகில் முழவ, மயில்கள் பல நடம் ஆட, வண்டு பாட,
விரை சேர் பொன் இதழி தர, மென்காந்தள் கை ஏற்கும் மிழலை
ஆமே.