எண் இறந்த அமணர்களும், இழி தொழில் சேர் சாக்கியரும்,
என்றும் தன்னை
நண்ண (அ)ரிய வகை மயக்கி, தன் அடியார்க்கு அருள்புரியும்
நாதன் கோயில்
பண் அமரும் மென்மொழியார் பாலகரைப் பாராட்டும் ஓசை கேட்டு,
விண்ணவர்கள் வியப்பு எய்தி, விமானத்தோடும் இழியும் மிழலை
ஆமே.