செந்தளிர் மா மலரோனும் திருமாலும், ஏனமொடு அன்னம் ஆகி,
அந்தம் அடி காணாதே, அவர் ஏத்த, வெளிப்பட்டோன் அமரும்
கோயில்
புந்தியின் நால்மறைவழியே புல் பரப்பி, நெய் சமிதை கையில்
கொண்டு,
வெந்தழலின் வேட்டு, உலகில் மிக அளிப்போர் சேரும் ஊர்
மிழலை ஆமே.