திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: மேகராகக்குறிஞ்சி

அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று, ஐம்புலனும்
அடக்கி, ஞானப்
புகல் உடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர்
கோயில்
தகவு உடை நீர் மணித்தலத்து, சங்கு உள வர்க்கம் திகழ,
சலசத்தீயுள்,
மிக உடைய புன்கு மலர்ப்பொரி அட்ட, மணம் செய்யும் மிழலை
ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி