எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும்,
எழில் கண்ணாடி
உழுந்து உருளும் அளவையின், ஒள் எரி கொள, வெஞ்சிலை
வளைத்தோன் உறையும் கோயில்
கொழுந் தரளம் நகை காட்ட, கோகநதம் முகம் காட்ட, குதித்து
நீர்மேல்
விழுந்த கயல் விழி காட்ட, வில் பவளம் வாய் காட்டும் மிழலை
ஆமே.