கருப்பம் மிகும் உடல் அடர்த்து, கால் ஊன்றி, கை மறித்து,
கயிலை என்னும்
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள் நெரித்த
விரல் புனிதர்கோயில்
தருப்பம் மிகு சலந்தரன் தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டி,
ஈண்டு
விருப்பொடு மால் வழிபாடு செய்ய, இழி விமானம் சேர் மிழலை
ஆமே.