திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆன நாள் ஒன்றில் அவ் ஒரு மீனும் அங்கு ஒழித்துத்
தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால்
மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலை ஆம்
பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி