திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று
பாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கிக்
காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து
ஏலவார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார்.

பொருள்

குரலிசை
காணொளி