வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்! அருள்
வேண்டுவீர்
கனைவில் ஆர் புனல் காவிரிக் கரை மேய கண்டியூர்
வீரட்டன்,
தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம்
ஆள, தான்
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடிப் பாடி, இவ் வையம்
மாப் பலி தேர்ந்ததே?