திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

இயலும் ஆறு எனக்கு இயம்புமின்(ன்) இறைவ(ன்)னும் ஆய்
நிறை செய்கையை!
கயல் நெடுங்கண்ணினார்கள் தாம் பொலி கண்டியூர் உறை
வீரட்டன்
புயல் பொழிந்து இழி வான் உளோர்களுக்கு ஆக அன்று,
அயன் பொய்ச் சிரம்,
அயல் நக(வ்), அது அரிந்து, மற்று அதில் ஊன் உகந்த
அருத்தியே!

பொருள்

குரலிசை
காணொளி