பழைய தொண்டர்கள்! பகருமின்-பல ஆய வேதியன்
பான்மையை!
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர் வீரட்டன்
குழை ஒர் காதினில் பெய்து உகந்து, ஒரு குன்றின் மங்கை
வெரு உறப்
புழை நெடுங்கை நன் மா உரித்து, அது போர்த்து உகந்த
பொலிவு அதே!