திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

விரவு இலாது உமைக் கேட்கின்றேன்; அடி விரும்பி
ஆட்செய்வீர்! விளம்புமின்-
கரவு எலாம் திரை மண்டு காவிரிக் கண்டியூர் உறை வீரட்டன்
முரவம், மொந்தை, முழா, ஒலிக்க, முழங்கு பேயொடும் கூடிப்
போய்,
பரவு வானவர்க்கு ஆக வார்கடல் நஞ்சம் உண்ட பரிசு
அதே!

பொருள்

குரலிசை
காணொளி