அடியர் ஆயினீர்! சொல்லுமின்-அறிகின்றிலேன், அரன்
செய்கையை;
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர் வீரட்டத்து உறை
பான்மையான்,
முடிவும் ஆய், முதல் ஆய், இவ் வையம் முழுதும் ஆய்,
அழகு ஆயது ஓர்
பொடி அது ஆர் திருமார்பினில் புரிநூலும் பூண்டு, எழு
பொற்பு அதே!