கருத்தனை, பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை
கள்வனை,
அருத்தனை, திறம் அடியர்பால் மிகக் கேட்டு உகந்த வினா
உரை
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ்
ஒருத்தர் ஆகிலும், பலர்கள் ஆகிலும், உரைசெய்வார்
உயர்ந்தார்களே.