நமர் எழுபிறப்பு அறுக்கும் மாந்தர்கள்! நவிலுமின், உமைக்
கேட்கின்றேன்!
கமர் அழி வயல் சூழும் தண்புனல் கண்டியூர் உறை வீரட்டன்
தமர் அழிந்து எழு சாக்கியச் சமண் ஆதர் ஓதுமது கொள
அமரர் ஆனவர் ஏத்த, அந்தகன் தன்னைச் சூலத்தில்
ஆய்ந்ததே!