திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

திருந்து தொண்டர்கள்! செப்புமின்-மிகச் செல்வன் த(ன்)னது
திறம் எலாம்!
கருந் தடங்கண்ணினார்கள் தாம் தொழு கண்டியூர் உறை
வீரட்டன்
இருந்து நால்வரொடு, ஆல்நிழல், அறம் உரைத்ததும், மிகு
வெம்மையார்
வருந்த வன் சிலையால் அம் மா மதில் மூன்றும் மாட்டிய
வண்ணமே!

பொருள்

குரலிசை
காணொளி