திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

பெருமையே சரண் ஆக வாழ்வு உறு மாந்தர்காள்! இறை
பேசுமின்-
கருமை ஆர் பொழில் சூழும் தண்வயல் கண்டியூர் உறை
வீரட்டன்
ஒருமையால் உயர் மாலும், மற்றை மலரவன், உணர்ந்து
ஏத்தவே,
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அத்
தன்மையே!

பொருள்

குரலிசை
காணொளி