அம் தண்மதி செஞ்சடையர், அம் கண் எழில் கொன்றையொடு
அணிந்து, அழகர் ஆம்
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது, வேண்டில், எழில் ஆர்
பதி அது ஆம்
கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால்
வந்த திரை உந்தி, எதிர் மந்தி மலர் சிந்தும்
மயிலாடுதுறையே.