நிணம் தரு மயானம், நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு
பேய்க்-
கணம் தொழு கபாலி கழல் ஏத்தி, மிக வாய்த்தது ஒரு
காதன்மையினால்,
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன்,
மயிலாடுதுறையைப்
புணர்ந்த தமிழ்பத்தும் இசையால் உரைசெய்வார், பெறுவர்,
பொன்னுலகமே.