தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி, மிகு நோக்கு
அரியராய்,
மூளை படு வெண்தலையில் உண்டு, முதுகாடு உறையும்
முதல்வர் இடம் ஆம்
பாளை படு பைங்கமுகு செங்கனி உதிர்த்திட, நிரந்து, கமழ் பூ,
வாளை குதிகொள்ள, மடல் விரிய, மணம் நாறும்
மயிலாடுதுறையே.