ஒண்திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத
வகையால்,
அண்டம் உற அங்கி உரு ஆகி, மிக நீண்ட அரனாரது இடம்
ஆம்
கெண்டை இரை கொண்டு, கெளிறு ஆர் உடன் இருந்து,
கிளர்வாய் அறுதல் சேர்
வண்டல் மணல் கெண்டி, மடநாரை விளையாடும்
மயிலாடுதுறையே.