திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

இலங்கை நகர் மன்னன் முடி ஒருபதினொடு இருபது தோள்
நெரிய, விரலால்
விலங்கலில் அடர்த்து, அருள்புரிந்தவர் இருந்த இடம்
வினவுதிர்களேல்
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு
மகிழா,
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே.

பொருள்

குரலிசை
காணொளி