திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

கடம் திகழ் கருங்களிறு உரித்து, உமையும் அஞ்ச, மிக
நோக்கு அரியராய்,
விடம் திகழும் மூ இலை நல்வேல் உடைய வேதியர் விரும்பும்
இடம் ஆம்
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில்
கொண்ட துவர்வாய்
மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும்
மயிலாடுதுறையே.

பொருள்

குரலிசை
காணொளி