அவ்வ(த்) திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள் செய்து,
அவர்கள் மேல்
எவ்வம் அற, வைகலும் இரங்கி, எரி ஆடும் எமது ஈசன் இடம்
ஆம்
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ்பூ
மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும்
மயிலாடுதுறையே.