ஏதம் இலர், அரிய மறை; மலையர் மகள் ஆகிய இலங்கு நுதல்
ஒண்
பேதை தடமார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது
இடம் ஆம்
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு
காவிரியுளால்,
மாதர் மறிதிரைகள் புக, வெறிய வெறி கமழும்
மயிலாடுதுறையே.