பூ விரி கதுப்பின் மடமங்கையர் அகம்தொறும் நடந்து, பலி
தேர்
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல்
ஆம்
காவிரி நுரைத்து இருகரைக்கும் மணி சிந்த, வரிவண்டு கவ
மா விரி மதுக் கிழிய, மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே.