மிண்டு திறல் அமணரொடு சாக்கியரும் அலர் தூற்ற, மிக்க
திறலோன்
இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம்
என்பர் எழில் ஆர்
தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை, நிரந்து கமழ்பூ
வண்டு அவை கிளைக்க, மது வந்து ஒழுகு சோலை
மயிலாடுதுறையே.