கோழை மிடறு ஆக, கவி கோளும் இல ஆக, இசை கூடும்
வகையால்,
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன்
இடம் ஆம்
தாழை இளநீர் முதிய காய் கமுகின் வீழ, நிரை தாறு சிதறி,
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி, வயல் சேறு செயும்
வைகாவிலே.