இன்ன உரு, இன்ன நிறம், என்று அறிவதேல் அரிது;
நீதிபலவும்
தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்வு
இடம்
முன்னை வினை போம் வகையினால், முழுது உணர்ந்து
முயல்கின்ற முனிவர்
மன்ன, இருபோதும் மருவித் தொழுது சேரும், வயல்
வைகாவிலே.