திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

“ஈசன், எமை ஆள் உடைய எந்தை பெருமான், இறைவன்”
என்று தனையே
பேசுதல் செயா அமணர், புத்தர் அவர், சித்தம் அணையா
அவன் இடம்
தேசம் அது எலாம் மருவி நின்று பரவித் திகழ நின்ற
புகழோன்,
வாசமலர் ஆன பல தூவி, அணையும் பதி நல்
வைகாவிலே.

பொருள்

குரலிசை
காணொளி