நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர், வல்ல
வகையால்,
தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி
இடம் ஆம்
நீளி வளர் சோலைதொறும் நாளிபல துன்று கனி நின்றது
உதிர,
வாளை குதிகொள்ள, மது நாற மலர் விரியும் வயல்
வைகாவிலே.