நஞ்சு அமுது செய்த மணிகண்டன், நமை ஆள் உடைய ஞான
முதல்வன்,
செஞ்சடை இடைப் புனல் கரந்த சிவலோகன், அமர்கின்ற
இடம் ஆம்
அம் சுடரொடு, ஆறுபதம், ஏழின் இசை, எண் அரிய வண்ணம்
உள ஆய்,
மஞ்சரொடு மாதர்பலரும் தொழுது சேரும், வயல்
வைகாவிலே.