அந்தம் முதல்-ஆதி பெருமான் அமரர்கோனை, அயன் மாலும்
இவர்கள்
“எந்தைபெருமான்! இறைவன்!” என்று தொழ, நின்று
அருள்செய் ஈசன் இடம் ஆம்
சிந்தை செய்து பாடும் அடியார், பொடி மெய் பூசி எழு
தொண்டர் அவர்கள்
வந்து பல சந்த மலர், முந்தி அணையும் பதி நல்
வைகாவிலே.