அண்டம் உறு மேருவரை, அங்கி கணை, நாண் அரவு அது,
ஆக, எழில் ஆர்
விண்டவர் தம் முப்புரம் எரித்த விகிர்தன்(ன்) அவன் விரும்பும்
இடம் ஆம்
புண்டரிகம் மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம்
எலாம்
வண்டின் இசை பாட, அழகு ஆர் குயில் மிழற்று பொழில்
வைகாவிலே.