திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

ஊனம் இலர் ஆகி, உயர் நல்-தவம் மெய் கற்று, அவை
உணர்ந்த அடியார்
ஞானம் மிக நின்று தொழ, நாளும் அருள் செய்ய வல நாதன்
இடம் ஆம்
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே, பொழில்கள் தோறும்,
அழகு ஆர்
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும்
வைகாவிலே.

பொருள்

குரலிசை
காணொளி