திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

மருந்து அவை; மந்திரம், மறுமை நன்நெறி அவை; மற்றும்
எல்லாம்;
அருந்துயர் கெடும்; அவர் நாமமே சிந்தை செய், நன்
நெஞ்சமே!
பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதர, துன்று
பைம்பூஞ்-
செருந்தி செம்பொன்மலர் திரு நெல்வேலி உறை செல்வர்
தாமே.

பொருள்

குரலிசை
காணொளி